சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மட்டக்களப்பில் லொறி மோதி பாடசாலை ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பில் லொறி மோதி பாடசாலை ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியரான புளியந்தீவினைச் சேர்ந்த கமலநாதன் மதிவதனி (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.



மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.


ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை நிலவியது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன், தப்பி ஓடிய சாரதியைக் கைது செய்யவும், விபத்து தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்