சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மாட்டு வண்டியில் வலம்வந்து இடம்பெற்ற வெள்ளைக்கார மாப்பிள்ளையின் திருமணம்

மாட்டு வண்டியில் வலம்வந்து இடம்பெற்ற வெள்ளைக்கார மாப்பிள்ளையின் திருமணம்
யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த மணமகன் ஒருவர், தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து மாட்டு வண்டிலில் வலம்வந்து திருமணம் செய்துகொண்ட அபூர்வ நிகழ்வு பலரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கும், வெள்ளைக்கார இளைஞர் ஒருவருக்கும் இடையேயான இத் திருமணமானது வடமராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

முற்றிலும் தமிழர் கலாச்சாரப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திருமண விழாவில், வெளிநாட்டு மணமகன் வெள்ளை வேட்டி மற்றும் தேசிய உடையில் கம்பீரமாகக் காட்சி அளித்தார். அத்துடன், மணமக்கள் இருவரும் நவீன வாகனங்களை விடுத்து, கிராமிய மணமணம் மாறாத பாரம்பரிய மாட்டு வண்டிலில் ஏறி ஊர்வலமாக வலம் வந்தனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த மணமகன் ஒருவர் நம் நாட்டுப் பாரம்பரிய உடைகளை அணிந்து, கிராமிய முறைப்படி மாட்டு வண்டிலில் பவனி வந்து திருமணம் செய்துகொண்ட இந்த விசித்திரமான மற்றும் அழகிய நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.









பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்