சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் முழு உண்­மை­களும் வெளிப்­ப­டுமா?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் முழு உண்­மை­களும் வெளிப்­ப­டுமா?
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் தொடர்­பான முக்­கிய வழக்கின் தீர்ப்பு கடந்த 22ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டது.

இந்த குண்டு தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த 25 பேருக்கு எதி­ராக, கொழும்பு மேல் நீதி­மன்­றத்தின் மூன்று நீதி­ப­திகள் அடங்­கிய அமர்வு முன்­னி­லையில் தாக்கல் செய்­யப்­பட்ட இந்த வழக்கில், 15 பேர் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டு, 200 தொடக்கம் 260 ஆண்­டுகள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒருவர் காவலில் இருந்த போதே மர­ண­ம­டைந்து விட்ட நிலையில், ஏனைய  9 பேர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்தத் தீர்ப்பு வெளி­யி­டப்­பட்டு விட்­டதால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் தொடர்­பான வழக்­குகள் அனைத்தும் முடி­வுக்கு வந்து விட்­ட­தாக அர்த்தம் கொள்ள முடி­யாது.

ஏனென்றால், ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்­குதல் விவ­காரம் என்­பது எட்டு இடங்­களில் நடந்த குண்டு வெடிப்­புக்­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தல்ல.

இது ஒரு பரந்­து­பட்ட- பல வழக்­கு­களை கொண்ட ஒரு தொகுப்­பாக இருக்­கி­றது.

அதில் ஒரு வழக்கின் தீர்ப்பு மாத்­திரம் இப்­போது வெளி­வந்­தி­ருக்­கி­றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களின் அடிப்­ப­டையில், நாடு முழு­வதும் 40இற்கும் மேற்­பட்ட குற்­ற­வியல் வழக்­கு­களும், 280 இற்கும் மேற்­பட்ட சிவில் வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. இந்த தாக்­குதல், பல கிளை சம்­ப­வங்­க­ளுக்கும் வழக்­கு­க­ளுக்கும் கார­ண­மா­கி­யி­ருக்­கி­றது.

இதற்­கான பொறுப்­புக்­கூ­றலும்,  பரந்­து­பட்ட ரீதி­யாக ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது.

அதன் ஒரு கட்­டத்­திற்­கான நீதி­மன்ற தீர்ப்பு மாத்­தி­ரமே வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

இது இந்த சம்­ப­வங்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­வர்கள் அல்­லது மறை­மு­க­மாக தொடர்­பு­பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்­கான தண்­ட­னை­களை மையப்­ப­டுத்­தி­யது.

ஆனால், இந்த தாக்­கு­தல்­களை ஒட்டி இன்னும் பல விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த தாக்­கு­தல்கள் வெறு­மனே ஒரு தீவி­ர­வாத எண்ணம் கொண்ட குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்­பது மாத்­தி­ர­மல்ல. அதற்கு அப்பால் அந்தக் குழுவைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு சதித்­திட்டம் என்ற அடிப்­ப­டையில்  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த விசா­ர­ணை­களும் கூட பல்­வேறு கட்­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன..

இந்த தாக்­கு­த­லுக்கு இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பகு­தி­யினர், சதித்­திட்டம் தீட்டி, செயற்­ப­டுத்­தி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டு முக்­கி­ய­மா­னது.

ஜெனரல் சுரேஷ் சலே


இதன் அடிப்­ப­டையில் அரச புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் தலை­வ­ரான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். இந்த விசா­ர­ணைகள் ஒரு பக்கம் நடந்து கொண்­டி­ருக்க, இன்­னொரு பக்கம் இந்த தாக்­கு­த­லுக்கு அர­சியல் ரீதி­யாக சதித்­திட்டம் தீட்­டப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற விசா­ரணை, கோட்­டா­பய ராஜ பக் ஷவை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இதனை அடுத்து, அவர் தன்னை கைது செய்­வதை தடுக்கக் கோரி நீதி­மன்­றத்தை நாடி­யி­ருக்­கிறார். அதே­வேளை கோட்­டா­பய ராஜபக் ஷ, வெளி­நாடு செல்­வ­தற்கு நீதி­மன்றம் தடை விதித்­துள்­ளது.

மற்­றொரு பக்­கத்தில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலைத் தடுப்­பதில், பாது­காப்பு மற்றும் நிர்­வாக அதி­கா­ரி­களின் அலட்­சி­ய­மாக இருந்­தது தொடர்­பான வழக்­கு­களும் உள்­ளன.

தாக்­குதல் நடக்­க­வுள்­ள­தாக முன்­கூட்­டியே புல­னாய்வுத் தக­வல்கள் கிடைத்தும், பொது­மக்­களைப் பாது­காக்கத் தவ­றிய மற்றும் கடமை தவ­றி­ய­தாக, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட குற்­ற­வியல் வழக்­கு­களில் அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதன் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு மர­ண­ தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை,  தாக்­கு­தலைத் தடுக்கத் தவ­றி­யதன் மூலம் மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­ய­தாக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் புல­னாய்வுப் பிரிவின் பிர­தா­னிகள் உள்­ளிட்­டோ­ருக்கு எதி­ராக, பாதிக்­கப்­பட்ட தரப்­பினர், கத்­தோ­லிக்க திருச்­சபை மற்றும் சிவில் அமைப்­பு­க­ளினால் உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

Inspector General of Police Pujith Jayasundara and former Defence Secretary Hemasiri Fernando



தாக்­கு­தல்­களைத் தடுக்கத் தவ­றி­யதன் மூலம் பொது­மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாகக் கண்­ட­றி­யப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  100 மில்­லியன் ரூபா­வையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர 75 மில்­லியன் ரூபா­வையும், முன்னாள் அரச புல­னாய்வு சேவை பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­தன,  75 மில்­லியன் ரூபா­வையும், முன்னாள் பாது­காப்பு  செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ  50 மில்­லியன் ரூபா­வையும், முன்னாள் தேசிய புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் சிசிர மெண்டிஸ் 10 மில்­லியன் ரூபா­வையும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீ­டாக வழங்க வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.


தாக்­குதல் நடந்த காலத்தில் ஜனா­தி­ப­தி­யாக இருந்தாதல், மைத்­தி­ரி­பால சிறி­சேன குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தப்­பித்துக் கொண்டார்.

பொலிஸ் மா அதி­ப­ரா­கவும் பாது­காப்புச் செய­லா­ள­ரா­கவும் இருந்­த­வர்கள், தண்­டனை பெற நேரிட்­டது.

பிர­தான சந்­தேக நபர்கள் அல்­லது குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான வழக்­குகள் மாத்­திரம்  இப்­போது முடிவுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

எனினும், இந்த சம்­ப­வங்­களை ஒட்­டிய ஏனைய வழக்­குகள் தொடர்ந்து நிலு­வை­யி­லேயே உள்­ளன. சில வழக்­குகள் இப்­போது, ஆரம்ப கட்­டத்­தி­லேயே இருக்­கின்றன.

இந்த வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தற்கே நீண்ட காலங்கள் தேவைப்­படும்.

குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்டு நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளுக்குப் பின்னர், தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு இன்னும் பல ஆண்­டுகள் ஆகலாம்.

இந்த தாக்­குதல் சம்­பவம் மிகப்­பெ­ரிய அள­வி­லான விசா­ர­ணை­க­ளுக்கும் பரந்­து­பட்ட கைதுகள் மற்றும் புல­னாய்­வு­க­ளுக்கும் வழி­வ­குத்­தி­ருக்­கி­றது.

இந்தத் தாக்­குதல் தடுத்­தி­ருக்கக் கூடிய ஒன்று. அர­சியல் மற்றும் பாது­காப்பு தரப்­பி­னரின் அலட்­சி­யங்­களும் கவ­ன­யீ­னங்­களும் அதற்­கான வாய்ப்­பு­களை இல்­லாமல் செய்­தி­ருக்­கி­ன்றன.

அரச மற்றும் பாது­காப்புத் தரப்­பு­களின் இந்தப் பல­வீ­னங்கள், இந்த திட்­டத்தை தீட்­டி­ய­வர்­க­ளுக்கு- சதி செய்­த­வர்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்து விட்­டது.

இந்தச் சதித்­திட்டம் தொடர்­பான விசா­ர­ணை­களில் இன்னும் அவிழ்க்­கப்­ப­டாத பல முடிச்­சுகள் உள்­ளன.

இந்த தாக்­குதல் தொடர்­பாக வெளி­யாகக் கொண்­டி­ருக்கும் தக­வல்கள் பல அதிர்ச்­சியைக் கொடுப்­ப­தாக அமைந்­துள்­ளன.

பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக இருந்­தவர் யார் என்­பதைக் கண்­ட­றி­வது தான், ஒட்­டு­மொத்த வழக்­கு­க­ளையும் முடி­வுக்குக் கொண்டு வரும்.

உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களை கண்­ட­றி­வ­தற்­கான  விசா­ர­ணைகள் எந்­த­ள­வுக்கு நேர்­மை­யா­கவும் பக்கச் சார்­பின்­றியும்  முன்­னெ­டுக்­கப்­படும் என்ற கேள்வி இன்னமும் நீடிக்கிறது.

ஏனென்றால் இந்த விசாரணை வளையத்திற்குள் பலம் வாய்ந்த அரசியல் தரப்புகள் இருக்கின்றன.

சக்தி வாய்ந்த படைத்தரப்பு அதிகாரிகளும் தொடர்புபட்டிருக்கின்றனர்.

இராணுவ புலனாய்வு பிரிவில் ஒரு பகுதி இதில் சம்பந்தப்பட்டதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், சக்திவாய்ந்த இந்த தரப்புக்களின் தொடர்புகள் மற்றும், சதித் திட்டங்கள் அம்பலப்படுத்தப்படுவதை விரும்பாத சக்திகள் அல்லது உண்மைகள் வெளிவருவதை தடுக்க முற்படும் தரப்புகள், அவற்றை தடுப்பதற்கு முற்பட கூடும்.

இவ்வாறான தடைகளைத் தாண்டி, இந்த தாக்குதல்கள் தொடர்பாக முழுமையான புலனாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படுமா என்பது  கேள்விக்குறி தான்.

அந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் வரை, இந்த சந்தேகம் நீடித்திருக்கும்.


-கார்­வண்ணன்-
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்