சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மேற்­கு­லக நாடுகளின் தந்திரம்!: லித்­து­வே­னியா-ரஷ்யா இடையே மூளம்போகும் அணுவாயுத போர்!!

மேற்­கு­லக நாடுகளின் தந்திரம்!: லித்­து­வே­னியா-ரஷ்யா இடையே மூளம்போகும் அணுவாயுத போர்!!
மூன்றாம் உலகப் போர் தொடர்­பி­லான அச்சம் உலகின் பெரும்­பா­லான மக்­க­ளுக்கு உள்­ளது. அத்­த­கைய ஒரு போர் உரு­வா­கு­மே­யானால் மனித குலம் ஒட்டு மொத்­த­மாக அழிந்து போய்­விடும் என்­ப­துவும் நிதர்­ச­ன­மான உண்மை. 

எனினும், மூன்றாம் உலகப் போரின் விளை­வுகள் தொடர்­பாக சாதா­ரண மக்­க­ளுக்கு உள்ள தெளிவு சில நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு இல்­லையோ என நினைக்கத் தூண்டும் அள­வுக்கு உள்­ளன அவர்கள் சிலரின் செயற்­பா­டுகள்.

இன்­றைய உலகில் மிகப் பெரும் போர்­க­ளாக உக்ரேன் மீதான ரஷ்யப் படை­யெ­டுப்பு, ஈரான்-­–அ­மெ­ரிக்க மோதல், இஸ்ரேல் மேற்­கொண்­டு­வரும் பலஸ்­தீனம் மற்றும் மத்­திய கிழக்கு நாடுகள் மீதான தாக்­கு­தல்கள் உள்­ளிட்ட ஒரு சில உள்­ளன. 

இந்த மோதல்­களில் ஈடு­பட்­டுள்ள ரஷ்யா, அமெ­ரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடு­க­ளிடம் அணு ஆயு­தங்கள் உள்­ளன. ஆனால், தற்­போ­தைய மோதல்­களில் அவற்றைப் பயன்­ப­டுத்த அந்த நாடுகள் முய­ல­வில்லை, முய­லவும் மாட்டாது  என எதிர்­பார்க்­கலாம்.

இன்­றைய உலகில் அதிக அணு ஆயு­தங்­களைத் தன்­ன­கத்தே கொண்ட ஒரு நாடாக ரஷ்யா விளங்­கு­கி­றது. உக்ரேன் போரை ரஷ்யா நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பித்த நாள் முதல், ஐரோப்­பிய நாடுகள் மீது படை­யெ­டுக்கும் உத்­தேசம் ரஷ்­யா­வுக்கு உள்­ளது என்­கின்ற ஒரு கதை­யாடல் ஐரோப்­பிய நாடு­களின் அர­சியல் உயர்­மட்­டங்­களில் நில­வு­வதை நாம் அறிவோம். 

நேட்டோ அமைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் நாடு­க­ளிலும், ஐரோப்­பிய ஒன்­றிய அங்­கத்­துவ நாடு­க­ளிலும் இந்த எதி­ரொலி அதி­க­மாக உள்­ளது. ஐரோப்­பிய நாடுகள் மீது படை­யெ­டுக்கும் உத்­தேசம் எதுவும் தனக்கு இல்லை என ரஷ்யா மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லி வந்­தாலும் அதனைக் காதில் வாங்­கு­வ­தற்கு அத்­த­கைய நாடு­களின் தலை­வர்கள் தயா­ராக இல்லை. 

அதே­வேளை, ரஷ்ய அபாயம் என்ற ஒன்றைக் கட்­ட­மைத்­துள்ள அவர்கள், அதனை எதிர்­கொள்ளும் நோக்­குடன் படைக் கட்­டு­மா­னங்­களை வலுப்­ப­டுத்­து­வ­துடன், படைத் துறைக்­கான செல­வி­னங்­க­ளையும் அதி­க­ரித்து வரு­கின்­றனர்.

ரஷ்ய அபா­யத்தை எதிர்­கொள்ள சொந்த நாட்டைத் தயார்­ப­டுத்­தி­ வரும் அவர்கள், ரஷ்ய எல்­லை­யோரம் உள்ள நாடு­களில் படை­களைக் குவிப்­ப­திலும், கன­ரக ஆயு­தங்­களை நகர்த்­து­வ­திலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

ஒரு வகையில் அத்­த­கைய நாடு­களை ஒரு இடைத் தடுப்பு வல­ய­மாக மாற்­றி­ய­மைக்க அவர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். ஒரு சில நாடு­களில் அவர்­களின் முயற்சி வெற்­றி­ய­ளிக்­கவும் செய்­கி­றது. அத்­த­கைய நாடு­களுள் ஒன்­றாக முன்னாள் சோவியத் ஒன்­றிய நாடான லித்­து­வே­னியா உள்­ளது.


1990களில் சோவியத் ஒன்­றியம் வீழ்ச்சி கண்­ட­போது ஒன்­றி­யத்தில் அங்­க­மாக இருந்த பல நாடுகள் சுதந்­திர நாடு­க­ளாக மாறின. சோவியத் ஒன்­றியம் முடி­வுக்கு வந்­த­போது முன்னாள் ஒன்­றிய நாடு­களை நேட்­டோவில் சேர்த்துக் கொள்­வ­தில்லை என்ற வாக்­கு­று­தியை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகம் வழங்கி இருந்­தது. 

வழக்கம் போல இந்த வாக்­கு­று­தி­யையும் மேற்­கு­லகம் காற்றில் பறக்­க­விட்­டது. இதன் விளை­வாக ஐரோப்­பிய ஒன்­றி­யமும், நேட்­டோவும் பொரு­ளா­தார உத­விகள் உள்­ளிட்ட உத­வி­களை வழங்கி முன்னாள் சோவியத் ஒன்­றிய நாடு­களை தமது வசம் இழுக்கத் தொடங்­கி­யதன் விளை­வாக பிராந்­தி­யத்தில் பல ஆயுத மோதல்கள் வெடித்­தன.

மேற்­கு­லகின் ஆசை வார்த்­தை­க­ளுக்கு மயங்கி தமது நாட்­டையும், குடி­மக்­க­ளையும் பணயம் வைக்கும் போக்கு அத்­த­கைய நாடு­களில் தொட­ரவே செய்­கி­றது. 

அத்­த­கைய ஒரு விசப் பரீட்­சையில், முன்னாள் சோவியத் ஒன்­றிய நாடான லித்­து­வே­னி­யாவும் உள்­ளது. பேர­ழிவுகளை ஏற்படுத்தும்  ஆயு­தங்­களைத் தனது மண்ணில் நிலை­நி­றுத்தும் வகை­யி­லான ஒரு நகர்வில் அந்த நாடு தற்­போது ஈடு­பட்டு வரு­கின்­றது. 

இதுநாள் வரை அந்த நாட்டில் இருந்த சட்­ட ­ரீ­தி­யி­லான கடப்­பாடு ஜூலை மாதத்­துடன் முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து தனது நிலைப்­பாட்டை மாற்றும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் ஒன்றைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது. இது தொடர்பில் பாரா­ளு­மன்றக் குழுவில் கடந்த வாரம் முன்­வைக்­கப்­பட்ட ஒரு யோசனை ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இரண்டு பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே குறித்த யோச­னைக்கு எதிர்ப்பை வெளி­யிட்டு உள்­ளனர். குறித்த சட்­ட­மூலம் பொது­மக்­களின் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட வேண்டும் என்­பது எதிர்க்கட்­சி­களின் நிலைப்­பா­டாக உள்­ளது. 

ஆனால், பாரா­ளு­மன்ற முடிவே போது­மா­னது என வாதி­டு­கிறார் நாட்டின் அதி­ப­ரான கிற்­றானஸ் நவ்­சேடா. எனினும், லித்து­வே­னிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­யப்­பட வேண்­டு­மானால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்று மாத இடை­வெ­ளியில் இரண்டு வாக்­கெ­டுப்­புகள் நடத்­தப்­பட வேண்டும் என்ற விதி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. 

அதனை அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றுமா என்­பது பொறுத்­தி­ருந்து பார்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. 29 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடான லித்­து­வே­னியா பால்ரிக் நாடு­களுள் ஒன்று. லத்­வியா, பெலாரஸ், போலந்து ஆகிய நாடு­க­ளு­டனும், ரஷ்­யாவின் கலி­னின்­கிராட் பிராந்­தி­யத்­து­டனும் எல்­லை­களைப் பகிர்ந்து கொள்ளும் லித்­து­வே­னி­யாவில் அணு ஆயு­தங்கள் நிலை­நி­றுத்­தப்­ப­டு­மாக இருந்தால் அது தனது நாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் என்­பது ரஷ்­யாவின் நிலைப்­பாடு.


முன்னாள் சோவியத் ஒன்­றிய நாடுகள் தமது நடு­நி­லை­மையைப் பேணும் வகையில் பேர­ழிவு ஆயு­தங்­களைத் தமது நாடு­களில் வைத்­தி­ருக்கக் கூடாது, வேறு நாடு­களின் படைத் தளங்­களைத் தமது மண்ணில் அனு­ம­திக்கக் கூடாது என்ற விதி உள்­ளது. 

எனினும், லித்­து­வே­னியா 2004ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பில் இணைந்து கொண்­டது. தற்­போது அணு ஆயு­தங்­களைத் தனது மண்ணில் அனு­ம­திக்கத் தயா­ராகி வரு­கின்­றது. மறு­புறம் தனது யுத்த தாங்கிப் படை­யணி ஒன்றை அந்த மண்ணில் நிலை­நி­றுத்த ஜேர்­மனி முடிவு செய்­துள்­ளது.

மேற்­படி நகர்­வுகள் யாவும் ரஷ்­யாவைக் குறி­வைத்த நகர்­வு­களே என்­பது சிறு பிள்­ளைக்குக் கூடப் புரியும். இருந்தும் லித்­து­வே­னியா போன்ற நாடுகள் வல்­ல­ர­சு­களின் சது­ரங்க ஆட்­டத்தில் பகடைக் காய்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 

அது பற்றி அந்த நாடு­களின் தலை­வர்கள் கவ­லைப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.  தற்­போ­தைய நிலையில் சொந்­த­மாக அணு ஆயு­தங்­களைக் கொண்ட ஒரே­யொரு ஐரோப்­பிய ஒன்­றிய நாடாக பிரான்ஸ் உள்­ளது. 

லித்­து­வே­னியா அனு­மதி வழங்­கினால் தனது அணு ஆயு­தங்­களுள் சில­வற்றை அந்த நாட்­டுக்கு நகர்த்­து­வ­தற்கு பிரான்ஸ் தயா­ராக உள்­ளது. அதே­வேளை, அணு ஆயு­தங்­களைச் சொந்­த­மாகக் கொண்­டி­ராத ஐரோப்­பிய நாடு­க­ளான  துருக்கி, நெதர்­லாந்து, பெல்­ஜியம், இத்­தாலி மற்றும் நெதர்­லாந்து முத­லான நாடு­களில் அமெ­ரிக்கா தனது அணு ஆயு­தங்­களை ஏலவே நிறுத்தி வைத்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

பனிப் போர்க் காலத்தில் சோவியத் ஒன்­றி­யத்­திற்கு எதி­ராக உரு­வாக்­கப்­பட்ட ஒரு படைக் கட்­ட­மைப்பே நேட்டோ. பனிப் போர் முடி­வுக்கு வந்த பின்­னரும் அந்தக் கட்­ட­மைப்பு தொடர்­கி­றது. 

அந்தக் கட்­ட­மைப்பு தற்­கா­லத்தில் ரஷ்­யாவை தனது எதிரி நாடாகப் பாவித்துச் செயற்­பட்டு வரு­கின்­றது. அதன் ஒரு அங்­க­மா­கவே ரஷ்­யாவின் எல்­லை­யோர நாடு­களில் தனது கட்­ட­மைப்பை விரி­வாக்கி வரு­வ­துடன், அவற்றை இடைத் தடுப்பு நாடு­க­ளா­கவும் உரு­வாக்கி வரு­கின்­றன நேட்டோ நாடுகள்.

லித்­து­வே­னி­யாவில் அணு ஆயு­தங்கள் வைக்­கப்­ப­டு­மானால் அவை நிச்­ச­ய­மாக மேற்­கு­லகைக் குறி வைக்கப் போவ­தில்லை, மாறாக ரஷ்­யா­வையே குறி வைக்கப் போகின்­றன. 

அத்­த­கைய ஒரு சூழ்­நி­லையில் ரஷ்­யாவும் பதி­லுக்கு தனது அணு ஆய­தங்­களை லித்­து­வே­னி­யாவை நோக்கி குறி வைக்க வேண்­டிய சூழல் உரு­வாகும். 

அணு ஆயுதத் தாக்­குதல் நடை­பெ­று­வ­தான ஒரு போலியான சமிக்ஞை கூட ரஷ்யாவின் பதில் தாக்குதலை தானாகவே தொடக்கிவிடும் அபாயம் உள்ளது. 

அதனை எதிர்கொள்ளும் திறன் உண்மையிலேயே லித்துவேனியாவுக்கு உள்ளதா என்பது மிகப் பாரிய கேள்வி. அணு ஆயுத மோதல் ஒன்று உருவானதன் பின்னர் அது உலகப் போராக உருவாகுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. 

லித்துவேனியா மீதான பதில் தாக்குதலைத் தொடர்ந்து நேட்டோ நாடுகள் உதவிக்கு வருவதெல்லாம் பின்னர் நடக்கக் கூடிய விடயங்கள். அதற்கு முன்னர் லித்துவேனியா அழிந்து போகும் என்பதே சர்வ நிச்சயம். 

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் வகையிலான இத்தகைய போக்கு நல்லதல்ல என லித்துவேனிய அரசியல் தலைமைக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்வது யார் என்பதே தற்போது உள்ள பெறுமதியான கேள்வி.

சுவிசிலிருந்து சண் தவராசா

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்