அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் இடம்பெற்ற கோரத் துப்பாக்கிச் சூடுச் சம்பவத்தில், 5 வயதுச் சிறுவன், 8 மாதக் கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பென்சில்வேனியாவின் ஈரி (Erie) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 45 வயதுடைய நபரொருவரே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு, பின்னர் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்த அவசரத் தகவலை அடுத்துக் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது வீட்டின் வெளியே இரண்டு பெண்களின் உடல்கள் கிடந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கிதாரியான நபர் வீட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். காவல்துறையினர் வீட்டை முழுமையாகச் சுற்றிவளைத்து அவரை வெளியே வருமாறு எச்சரித்தனர். எனினும், நீண்ட நேரத்திற்குப் பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனையிட்ட பொலிஸாருக்கு, அவர் துப்பாக்கிக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 8 பேரில் 7 பேர் துப்பாக்கிதாரியின் சொந்த உறவினர்கள் ஆவர். மற்றுமொருவர் அவர்களது குடும்ப நண்பராவார்.
இக்கொடூரத் தாக்குதலில் 5 வயதுச் சிறுவனும், 1 வயதுப் பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் பயங்கரத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பில் ஈரி நகர்க் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழப்புகள்: