டோரத்தி படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், நிஜ வாழ்க்கையில் அப்படி திருமணம் செய்த தம்பதியினர் கார்த்தி சுப்பராஜை கட்டி அணைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோரதி படம், திருநங்கைகளின் வாழ்க்கை சிக்கல்களை வெளிப்படுத்தும் ஒரு ஆழமான படைப்பாக அமைந்துள்ளது. திரையரங்கில், நிஜ டோரதி தம்பதியினர் இயக்குனரை சந்தித்து, தங்கள் வாழ்க்கை கதையைப் பகிர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது.
சிறுவயது நண்பர்களான சுப்பு, கார்த்தி ஆகியோரின் நட்பு பற்றியும், இறுதியில் சுப்பு தன்னை திருநங்கை என்பதை உணர்ந்து அதனால் நடக்கும் சமூக மாற்றத்தையும் கூறும் அழுத்தமான படைப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் டோரதி படம் உருவாகியுள்ளது. இந்த படம் திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த படத்தில் சுப்பு திருநங்கை என்பதை உணர்ந்து அவரது சிறு வயது நண்பனான கார்த்திக்கும் அவருக்கும் இடையே இறுதியில் ஒரு ஆழமான உறவு ஏற்பட்டது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் டோரதி படத்தை போல சிறு வயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின்னர் திருமணம் செய்துகொண்ட நிஜ தம்பதி குறித்த விவரம் வெளிவந்துள்ளது.

மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை கட்டி அணைத்து அவருக்கு கைகூப்பி இந்த படத்துக்காக தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளார். அதே போல திரையரங்கில் இருந்த பலரும் கார்த்திக் சுப்பராஜ்க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.No Words.... #Dorothy ❤️ pic.twitter.com/nXCsEP5syf
— karthik subbaraj (@karthiksubbaraj) October 3, 2026
Real-life Dorothy couple from Kerala! She explains that the movie is based on their real life experience. They both were childhood friends and now they are happily married. pic.twitter.com/zvM0RKUkIl
— Deepu (@deepu_drops) October 3, 2026
இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகளுக்கு நடைபெறும் திருமணத்துக்கு தற்போதும் சமூகத்தில் எதிர்ப்பு எழும் நிலையில், அவர்கள் மன நிலையையும், சமூகத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த டோரதி படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



