மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் டிப்பர் வாகனம் இழுத்துச் சென்றுள்ளது. இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி - பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞனின் கை, முழங்கைக்குக் கீழ் துண்டாடப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

